சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 4 வீரர்களை அனுப்பிய நாசா
13 கார்த்திகை 2021 சனி 10:24 | பார்வைகள் : 9873
பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 4 விண்வெளி வீரர்களை நாசா அனுப்பியுள்ளது.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் மூலம் ஃபுளோரிடாவில் உள்ள Kennedy விண்வெளி மையத்திலிருந்து 4 வீரர்கள் புறப்பட்டனர்.
அவர்கள் சுமார் 22 மணி நேரம் பயணம் செய்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Raja Chari உட்பட நாசாவின் Tom Marshburn, Kayla Barron மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் Matthias Maurer ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.