6 கார்த்திகை 2021 சனி 08:20 | பார்வைகள் : 10305
ஐபிசிசி அமைப்பு 1988-ம் ஆண்டு உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தற்போது வரை ஐந்து முழு அறிக்கைகளையும் அவ்வப்போது சில சிறப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் அனைத்து உலக நாடுகளும் கலந்துகொண்டு உலகவெப்பத்தை 2ºC (செல்சியஸிற்கு) அதிகமாகாமல் 1.5ºC என்கிற அளவிலேயே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். அதே மாநாட்டில், ஐபிசிசி அமைப்பு 2018-ம் ஆண்டு 1.5ºC என்பதைப் பற்றி ஓர் அறிக்கை அளிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தனர். இதன் அடிப்படையிலேயே இந்தச் சிறப்பு அறிக்கை வந்திருக்கிறது
நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் “புவி வெப்பமயமாதல்” அல்லது உலக வெப்பமயமாதல்.புவிவெப்பமயமாதல் என்பது பூமியினுடைய சுற்றுப்புற பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை உயர்வை குறிக்கும்
.
1850 இன் பின்னர் புவியின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை 10 செல்சியஸ் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை வளிமண்டலத்திலுள்ள காபனீன் செறிவும் 28 சதவிதமாக அதிகரித்துள்ளது.இது கடந்த 20 ஆம் நூற்றாண்டின் பாதியில் இருந்து இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு விளைவு.குறிப்பிட்டு சொல்ல கூடிய வகையில் பூமியின் வெப்ப நிலை 1oC – 4oC ஆக உயரும் என்று கணக்கிடபட்டுள்ளது.உலக சராசரி வெப்பநிலை உயர்வு 2100 ஆம் ஆண்டில் 4 டிகிரி செல்சியஸ் (7.2 ° F) வரை ஆக இருக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.
புவி வெப்பமயமாதல் காரணம்
நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை உட்கொள்ளவும், நாம் உட்கொள்ளும் ஆக்சிஜனை கொடுக்கவும் ஏராளமான தாவரங்களும், மரங்களும் இருந்தன. ஒரு இயற்கை சமநிலை இருந்தது.ஆனால், காலம் செல்ல செல்ல காடுகளை அழித்தல்,தொழிற்சாலைகளை நிறுவி பெருமளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றம்,
செயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்துதல்,
பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்டவைகளால் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. இதனால் பூமியின் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது .இந்த வாயுக்கள் சூரியனில் இருந்து வரும் வெப்ப கதிர்வீச்சுக்களை எந்த தடையும் இன்றி உட்செலுத்தியும், பூமி வெளியே எதிரொலிக்கும் வெப்பத்தை வெளிவிடாமல் செய்வதால் இந்த விளைவு ஏற்படுகிறது.
இவை, பூமியில் இருந்து 15 – 60 கிலோமீட்டர் உயரத்தில் உள்ளதும் சூரியனிடம் இருந்து வரக்கூடிய புற ஊதாக் கதிர்களை தடுத்து நிறுத்தி, பூமிக்கு ஒரு பாதுகாப்பு கேடயம் போன்று விளங்கும் ஓசோன் படலத்தை தாக்குகின்றன.இதனால், பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதோடு, தோல் புற்றுநோய், எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை ஏற்படும் பார்க்கவும்.
பசுமை இல்ல வாயுக்கள் அல்லது பைங்குடில் வாயுக்கள் என்பது
மிக முக்கியமான கிரீன்ஹவுஸ் வாயு உண்மையில் நீராவி, குறிப்பிடத்தக்க அளவில் மனித குலத்தின் மூலம் நேரடியாக வெளி இடப்படும் , கார்பன் டை ஆக்சைடு (CO2) வளிமண்டல நிலைகளில் கூட சற்று அதிகரிக்கும் வெப்பநிலை கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்தும்.
நீராவி, 36-70%
கார்பன் டை ஆக்சைடு, 9-26%
மீத்தேன், 4-9%
ஓசோன், 3-7%
• மேலும் இதற்கு காரணமாக உள்ள வாயுகள் மீத்தேன் (CH 4), நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O), ஹைட்ரோஃபுளோரோ கார்பன் (HFC),பெர்ஃபுளோரோ கார்பன் (PFCs), சல்பர் ஹெக்சா ஃபுளோரைடு (எஸ்எஃப் 6)
மக்கள் தொகை பெருக்கத்தினாலும், அதன் மூலமாக அதிகரித்து வரும் மின் பயன்பாடு, அதன் விளைவாக எரிக்கப்படும் நிலக்கரி மற்றும் எரிபொருள்களினால் வெளியேற்றப்படும் வாயுக்களாலும், மனிதர்களின் அதிகரித்து வரும் வாகன பயன்பாடுகளும், அதன் விளைவாக வெளியேற்றப்படும் வாயுக்களாலும், இயற்கையாக மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மூலமாக வெளிப்படும் மீதேன் என்னும் வாயுவினாலும், இந்த பசுமை கூடக வாயுக்கள் அதிகமாக தோன்றுகின்றன.
புவி வெப்பமயமாதலின் விளைவுகள்:
வரலாறு காணாத முறையில் அதிகரித்து வரும் வெப்பநிலை, உயர்ந்து வரும் கடல் மட்டம், வட துருவத்தில் குறைந்து வரும் பனியின் அளவு ஆகியவற்றின் மூலம் தெளிவான பின் விளைவுகள் தெரிய துவங்கிவிட்டன.
பனிப்பாறைகள் குறைந்து மறைந்து போகுதல்-
வரலாற்றில் பின்னோக்கி பார்க்கும் போது அதாவது 1850 லிருந்து1550 வரையான ஆண்டுக்காலத்தில் மிகவும் குளுமையான சமயத்தில் பனிப்பாறைகள் உருவாகின. இந்த சமயத்தை குறுகிய பனிக்காலம் என்று அழைக்கலாம். 1940 ஆம் ஆண்டு வரை உலகமெங்கும் இருந்த பனிப்பாறைகள் தட்ப வெப்பம் அதிகரிக்கும் போது குறையத் தொடங்கின.உலகம் எங்கும் லேசாக 1950 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை குளிரத் தொடங்கியதால் க்லேஸியர் ரிட்ரீட் பல நிகழ்வுகளில் குறையத்தொடங்கி இருந்தது .1980 ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகள் குறைவு மிகவும் விரைவாக நடக்கத் துவங்கியுள்ளது. இதனால் உலகிலுள்ள பல பெரும் பனிப்பாறைகளின் இருப்பு அச்சுறுத்தப்பட்டுள்ளன .1995 ஆம் ஆண்டு முதல் இந்த செய்முறை அதிவேகமாக நடை பெற்று வருகின்றது
கடல்கள்-
புவி வெப்பமடைதலில் கடலின் பங்கைப் பற்றி கூறுவது மிகவும் கடினமான ஒன்றாகும்.இந்த கடல்கள் கரியமிலவாயு கரையும் இடமாக இருக்கின்றன, இது காற்றுமண்டலத்தில் அதிகமாக இருக்கும் CO 2 வை தன்னுள் இழுத்து கடல் அமிலமாக மாற வைக்கிறது. கடலின் வெட்பம் அதிகரிக்கும் போது காற்றுமண்டலத்தில் அதிகமாக இருக்கும் CO 2 வை அதனால் உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. புவி வெப்பமடைவதால் ஏராளமான தாக்கங்கள் கடலின் மேல் ஏற்படுகின்றன.வெப்பம் அதிகமாகுதலும், பனிக்கட்டிகளும் பனித் தகடுகள் உருகுதலாலும், கடல் மேற்பரப்பு சூடாகுவதாலும், வெப்ப நிலை அதிகரிப்பதாலும் கடல் மட்டம் உயருகின்றது. இது தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு தாக்கமாகும்.இந்த தாக்கத்தினால், கடல் சுற்றோட்டத்தில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்படுகிறது .
1961 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை, உலக கடல் வெப்பம் மேற்பரப்பிலிருந்து 700 மீட்டர் ஆழம் வரை 0.10 ° சி உயர்ந்துள்ளது
தீர்வுகள்:
மனிதர்களும், மனிதர்களின் செயல்களும் தான் உலக வெப்பமயமாதலின் முழு காரணம் என்பது தெளிவு.இதற்கான முழு தீர்வுகள், அரசியல், பொருளாதார மற்றும் சமுதாய அமைப்புகளில் ஏற்பட வேண்டிய மாற்றத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.பசுமை கூடக வாயுக்களை நிறுத்தினாலும், வெப்ப உயர்வு உடனே நின்று விடாது, காலத்தால் இந்த வெப்பநிலை குறைவதற்கு இன்னும் சில காலமாகும்.இப்போது உலக அளவில் இந்த வாயுக்களின் அளவை 450 முதல் 550 பிபிஎம் ஆக நிறுத்துவது (குறைப்பது) தான் முதல் தீர்வாக கொண்டுள்ளனர்.இதன் தற்போதய அளவு 380 ஆக உள்ளது.
அரசாங்கமும், பல சமூக அமைப்புக்களும் இந்த பணியில் தீவிரமாக பணி ஆற்றிவருகின்றன, இன்னும் முக்கியமான சில மாற்றங்களான, இயற்கை வேளாண்மை, சூரிய சக்தி, இயற்கை பொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், சுற்றுசூழல் சீர்கேட்டை தடுக்கும் நடவடிக்கைகள், இவற்றினால் மட்டுமே இதன் தாக்கத்தை குறைக்க முடியும்.”புவி வெப்பமடைவதைத் தடுக்க, பூமி அழியாமல் காக்க நாம் செய்யக்கூடிய சில எளிய செயல்கள்:தேவையில்லாமல் இயங்கும் மின்கருவிகளை அணைக்க வேண்டும் .குண்டு மின் விளக்குகளை மாற்றி CFL விளக்குகளைப் பொருத்தலாம் .
மின்கருவிகள் வாங்கும் போது பிஇஇ முத்திரை 4 அல்லது 5 நட்சத்திரம் உள்ளதாக வாங்க வேண்டும்.குப்பையைக் குறைத்து முடிந்தவரை . கடைக்குப் போகும்போது கையோடு துணிப்பையை எடுத்துச்சென்று பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும்.போக்குவரத்திற்கு பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தலாம்.
குறைப்பது (Reduce)
மின் மற்றும் மின்னியல் சாதனங்களின் உற்பத்தியை குறைக்க வேண்டும். இதற்கு பொருள் நாம் மின்னியல் சாதனங்களின் தேவையில்லாத பயன்பாட்டை தவிர்க்கவேண்டும். நம்மால் முடிந்தவரை மின்னியல் சாதனங்களின் ஆயுள்காலத்தை அதிகமாக்க வேண்டும்.
மறு பயன்பாடு (Recovery)
மின்னியல் சாதனங்களை திரும்ப திரும்ப சரிசெய்து உபயோகிக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் தங்களிடம் உபயோகிக்கும் நிலையில் உள்ள மின்னியல் கழிவுகளை பின் தங்கிய மற்றும் வளரும் நாடுகளுக்கு உபயோகப்படுத்த கொடுக்க வேண்டும்.
மீள் சுழற்சி (Recycle)
மீள்சுழற்சி என்பது மின்னியல் கழிவுகளிலிருந்து மூலப்பொருட்களை பிரித்தெடுத்தல். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் மின்னியல் கழிவுகளில் உள்ள உலோகங்களையும் தாதுக்களையும் மற்ற வளங்களையும் பிரித்தெடுக்க வேண்டும். அதற்கு சிறந்த மறுசுழற்சி தொழில்நுட்பங்களுடனும் பாதுகாப்புடனும் தொழிற்கூடங்கள் அமைந்திருக்க வேண்டும்.
எனவே நாமும் நாம் பங்களிப்பை கொடுத்து நாம் வாழும் பூமியை காப்பது நமது கடமை ……