Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் நடந்த திரைப்பட படம்பிடிப்பு!

விண்வெளியில் நடந்த திரைப்பட படம்பிடிப்பு!

24 ஐப்பசி 2021 ஞாயிறு 10:03 | பார்வைகள் : 9666


விண்வெளி துறையில் ஒரு வரலாற்று நிகழ்வாக, விண்வெளியில் படபிடிப்பை நடத்திய உலகின் முதல் நாடாக ரஷ்யா வரலாறு படைத்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பட ஷூட்டிங்கிற்காக ரஷ்ய படக்குழு விண்வெளி சென்ற நிலையில், தற்போது, படபிடிப்பை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்புகிறது. படபிடிப்பு நடத்திய படத்தின் பெயர் 'The Challenge'. 

 
விண்வெளி வீரரை காப்பாற்ற விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பெண் மருத்துவரின் கதைதான் இதன் படக் கதையாகும். ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் (Roscosmos ) கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ஒரு விண்வெளி வீரர், ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் ஒரு நடிகர் ஆகியோரை விண்கலத்தில் ஏற்றிச் சென்றது.
 
விண்வெளியில் படம்பிடிக்கப்படும் படத்தின்  பெயருக்கு ஏற்ப அதன் படப்பிடிப்பு குழுவுக்கு ஒரு சவாலான பணி தான் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இதன் மூலம், விண்வெளியில் படம் எடுத்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.
 
விண்வெளியில் ரஷ்ய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பூமிக்கு திரும்புவதற்காக குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு கிளம்பினர். படத்தின் படப்பிடிப்புக்காக குழுவினர் 12 நாட்கள் விண்வெளியில் இருந்தனர். விண்வெளியில் படமாக்கப்பட்ட முதல் படம் இது, கதையின் சில பகுதிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் படமாக்கப்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை சர்வதேச நேரப்படி பிற்பகல் 1:15 மணிக்கு ராக்கெட் புறப்பட்டது.
 
நடிகை யூலியா பெரெசில்ட் (Yulia Peresild), தயாரிப்பாளர் கிளிம் ஷிபென்கோ (Klim Shipenko) மற்றும் விண்வெளி வீரர் அன்டன் ஷ்காப்லெரோவ் (Anton Shkaplerov) ஆகியோர் அக்டோபர் 5 ஆம் தேதி கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் எம்எஸ் -19 (Soyuz MS-19) விண்கலத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) சென்றார்கள். படப்பிடிப்புக்காக குழுவுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 
 
ரஷ்யா விண்வெளியில் முதல் படத்தை எடுக்கும் போட்டியில் அமெரிக்காவை முந்தியது. ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தனது 'மிஷன் இம்பாசிபிள்' படத்தை விண்வெளியில் எடுத்து, முதல் விண்வெளி ஷூடிட்ங் என சாதனை படைக்க போகிறார் என்று இதுவரை நம்பப்பட்டது. படத்தின் படப்பிடிப்புக்காக டாம் குரூஸும் விண்வெளிக்கு செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், அது குறித்து எந்த வித தகவலும் இதுவரை இல்லை.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்