தனி விண்வெளி நிலையம் அமைக்கும் சீனா! 3 வீரர்கள் விண்வெளி பயணம்!
17 ஐப்பசி 2021 ஞாயிறு 09:51 | பார்வைகள் : 10170
விண்வெளியில் சீனா தனக்கென தனி விண்வெளி நிலையம் கட்டி வரும் நிலையில் அதன் கட்டுமான பணிகளுக்காக மூன்று வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பங்களிப்பின் பேரில் கட்டமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணிலிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதன் ஆயுட்காலம் சில ஆண்டுகளின் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் சீனா தனக்கென தனி விண்வெளி நிலையம் அமைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளது. அதன்படி ஏற்கனவே 3 விண்வெளி வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர்கள் தங்களது பணிகளை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பினர்.
இந்நிலையில் அடுத்த கட்டமாக ஒரு பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்களை நேற்று சீனா விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளது. சீனா தான் கட்டமைக்கும் விண்வெளி நிலையத்திற்கு "தியான்ஹே" என பெயரிட்டுள்ளது.