திடீரென ஏற்பட்ட ஒளி! பீதியடைந்த பொதுமக்கள்
3 ஐப்பசி 2021 ஞாயிறு 18:02 | பார்வைகள் : 10196
நாசாவால் ஏவப்பட்ட ராக்கெட் மீண்டும் பூமியை வந்தடையும் போது திடீரென ஏற்படுத்திய முக்கோண அளவிலான ஒளியை கண்ட இங்கிலாந்து பொதுமக்கள் பீதியடைந்துள்ளார்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அட்லஸ் வி என்னும் ராக்கெட்டை விண்வெளி மண்டலத்திற்கு ஏவியுள்ளது. இதனையடுத்து அந்த ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது திடீரென முக்கோண அளவிலான ஒளியை வானில் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு உருவான ஒளியைக் கண்ட இங்கிலாந்து பொதுமக்கள் அது வேற்று கிரக விண்கலம் என்று நினைத்து அச்சமடைந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி அட்லஸ் வி ராக்கெட் மூலம் உருவான முக்கோண அளவிலான ஒளியை வீடியோவாக எடுத்தும் இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள்.