Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச விண்வெளி மையத்துடன் ரஷ்ய விண்கலம் இணையும் போது விபத்து!

சர்வதேச விண்வெளி மையத்துடன் ரஷ்ய விண்கலம் இணையும் போது விபத்து!

1 ஆவணி 2021 ஞாயிறு 10:51 | பார்வைகள் : 10106


ரஷ்ய விண்கலம் இணைந்த போது சர்வதேச விண்வெளி மையம் கட்டுப்பாட்டை இழந்ததற்கு மென்பொருள் கோளாறு மற்றும் மனித  தவறுகளே காரணம் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
ரஷ்ய விண்கலமான நௌகா, சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்ட போது திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக பூமிக்கும், சர்வதேச விண்வெளி மையத்துக்குமான தகவல் தொடர்பு சுமார் 45 நிமிடங்கள் வரை துண்டிக்கப்பட்டது.
 
பின்னர் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு ரஷ்ய விண்கலத்துடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையம் ஒரு நொடிக்கு அரை டிகிரி என்ற கோணத்தில் நகர்ந்ததால், அதனுள்ளே இருந்தவர்கள் நகர்வை உணரவில்லை என நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்