பிரிட்டனில் பிரமாண்டமான ரேடாரை நிறுவ அமெரிக்கா முடிவு!
18 ஆடி 2021 ஞாயிறு 09:49 | பார்வைகள் : 9515
விண்வெளி ஆராய்ச்சிக்காக பிரிட்டனில் மிகப் பெரிய ரேடாரை நிறுவ அமெரிக்கா விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்குச் சொந்தமான ஏராளமான ராணுவ செயற்கைக் கோள்கள் விண்வெளியில் சுற்றி வருகின்றன. அவற்றைத் தாண்டி 36 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் விண்வெளியில் உள்ள பொருட்களைக் கண்காணிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஸ்காட்லாந்தின் தெற்குப் பகுதியில் புதிய பிரமாண்ட ரேடாரை நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. குறிப்பிட்ட இடத்தில் 15 மீட்டர் விட்டம் கொண்ட ரேடார்கள் 10 முதல் 15 வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.