செவ்வாய்க்கோளில் பறக்கவுள்ள முதல் ஹெலிகாப்டர்
27 பங்குனி 2021 சனி 07:43 | பார்வைகள் : 9280
செவ்வாய்க்கோளில் 'Ingenuity' எனும் ஹெலிகாப்டரை, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பறக்க விடும் திட்டம் உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
BBC செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
செவ்வாய்க்கோளில் பறக்கவிருக்கும் முதல் ஹெலிகாப்டர் அது என்று கூறப்பட்டது.
'Ingenuity' என்று அழைக்கப்படும் அந்த ஹெலிகாப்டர் 1.8 கிலோகிராம் எடை கொண்டது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு செவ்வாய்க்கோளில் தரையிறங்கிய Perseverance விண்கலம், தன்னுடன் அந்த ஹெலிகாப்டரையும் கொண்டுசென்றது.
Wright சகோதரர்களின் விமானத்திலிருந்து, அஞ்சல் முத்திரை அளவிலான ஒரு துண்டுத்துணி, Ingenuity -இல் ஒட்டப்பட்டுள்ளது என்று BBC கூறியது.