பூமியைப் போன்ற புதிய கிரகத்தை கண்டுபிடித்த நாசா!
3 ஆவணி 2019 சனி 04:25 | பார்வைகள் : 9223
பூமியைப் போன்ற புதிய கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
டெஸ் என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கிரகத்திற்கு ஜி ஜே 357 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்தக் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதாகவும், அந்தக் கிரகம் நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வருவதாகவும் இதனால் அதிகக் குளிராகவோ, அதிக சூடாகவோ இல்லாததால் பூமியைப் போல சீதோஷ்ண நிலை இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜி ஜே 357 கிரகத்தில் உள்ள பாறைகளை ஆராய்ந்த போது அதில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியங்கள் தென்படுவதாகவும் எனவே அந்தக் கிரகத்திற்கு சூப்பர் எர்த் என்று புதிதாக பெயிரிடப்பட்டுள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறினர்.