நிலவில் மனிதன் கால் பதித்த 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கண்காட்சி!
21 ஆடி 2019 ஞாயிறு 11:52 | பார்வைகள் : 8894
சிங்கப்பூர் அறிவியல் நிலையம் நிலவில் மனிதன் கால் பதித்த 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கண்காட்சி ஒன்றை அமைத்துள்ளது.
“Moonshot 50” என்பது கண்காட்சியின் பெயர்.
நிலவுக்கும், மனிதகுலத்துக்கும் இடையிலான அறிவியல் மற்றும் கலாசார பூர்வமான தொடர்புகளை அது காட்சிப்படுத்துகிறது.
அதன் சிறப்பம்சமாக, நிலவில் முதலில் கால்பதித்த விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங்கும், எட்வின் ஆல்ட்ரினும் நிலாவிலிருந்து சேகரித்து வந்த சாம்பல் நிறப் பாறை ஒன்றும் இடம்பெறுகிறது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் அப்பல்லோ 11 விண்கலம் தான் நிலவிற்குச் செல்லும் மனிதனின் கனவை நனவாக்கியது.
அதன் பாதுகாப்புச் சின்னமாகப் பிரபல கேளிக்கைக் கதாபாத்திரமான Snoopy தேர்ந்தெடுக்கப்பட்ட கதையை விளக்குகிறது “Moonshot 50” கண்காட்சி.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அந்தக் கண்காட்சி இடம்பெறும் என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் தெரிவித்தது.