பூமிக்கு வரும் ஆபத்து! பேரழிவுக்கு வழி வகுக்குமா?
6 ஆடி 2019 சனி 13:53 | பார்வைகள் : 9168
பூமியின் திசையில் பூமியை நோக்கி ராட்சத சிறுகோள் ஒன்று 2,700 மெகாடன் அழிவு சக்தியுடன் வேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ராட்சச சிறுகோள் வரும் அக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக் கூடும் என்று நாசா சிறுகோள் ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த ராட்சச சிறுகோளிற்கு அஸ்டிராய்டு FT3 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த சிறுகோள் சுமார் 1,115 அடி மற்றும் 340 மீ விட்டம் கொண்ட பாறையினால் ஆனது என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் நாசா கனிந்துள்ள கணிப்பின் படி 2019 ஆண்டு முதல் 2116 ஆம் ஆண்டு வரை சுமார் 165 சிறுகோள் தாக்குதலைப் பூமி சந்திக்க போகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.
அஸ்டிராய்டு FT3 என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் ஒக்டோபர் 3, 2019 தேதி பூமியை நோக்கி அல்லது பூமியைத் தாண்டி செல்லும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளது போல, இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் கடந்து சென்றால் பூமிக்கு ஏற்படும் பேரழிவு மற்றும் ஆபத்து குறைவானது தான், ஆனால் இச்சிறுகோள் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் நிச்சயமாக விலகி பூமிக்கு நேராக வந்தால், முடிவுகள் பேரழிவு தரும் என்பதில் சந்தேகமில்லை என்று நாசா தெரிவித்துள்ளமை அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.