Paristamil Navigation Paristamil advert login

தயார் நிலையில் நாசாவின் அதிரடி நடவடிக்கை!

தயார் நிலையில் நாசாவின் அதிரடி நடவடிக்கை!

23 ஆனி 2019 ஞாயிறு 07:14 | பார்வைகள் : 2028


நாசா நிறுவனமானது 2021 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகம் நோக்கி மற்றும்மொரு ரோவர் விண்கலத்தினை அனுப்பவுள்ளமை தெரிந்ததே.
 
Mars 2020 Rover எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்கலமானது கலிபோர்னியாவில் உள்ள Jet Propulsion ஆய்வுகூடத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில் நாசா பொறியிலாளர்கள் குறித்த விண்கலம் தரையில் ஊன்றுவதற்கான கால்கள், ஊர்வதற்கான சில்லுகள் மற்றும் பாரத்தை தாங்கும் பொறிமுறை என்பவற்றினை பொருத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தற்போது செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் கியூரியோசிட்டி ரோவர் விண்கலத்தின் சில்லுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
 
செவ்வாய் கிரகத்தில் காணப்படும் குன்று, குழிகளே இதற்கு காரணமாகும்.
 
இவ்வாறு பாதிக்கப்பட்ட விண்கலத்தின் புகைப்படங்கள் கடந்த ஜனவரி மாதம் நாசாவினால் வெளியிடப்பட்டிருந்தது.
 
எனவே இப் பிரச்சினைகளை தாங்கும் விதமாக புதிய விண்கலத்தின் சில்லுகள் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்