விவசாயிகளுக்கு உதவ விண்வெளியிலிருந்து அறிமுமாகும் அதிரடி திட்டம்!
16 ஆனி 2019 ஞாயிறு 07:22 | பார்வைகள் : 2446
விவசாயம் மேற்கொள்வதற்கு காலநிலை என்பது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்.
எனினும் தற்போது வழங்கப்படும் காலநிலை அறிக்கைகள் பரந்த பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
இதனால் சில பிரதேசங்களில் காலநிலை அறிவிப்பிற்கு ஏற்ப பலன்கள் கிடைப்பதில்லை.
எனவே இதனை மேம்படுத்தி புதிய திட்டம் ஒன்றினை முன்மொழிந்துள்ளது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்.
அதாவது பிரத்தியேக செயற்கைக்கோள்களைக் கொண்டு ஒவ்வொரு விவசாய நிலப் பகுதிகளையும் தனித்தனியாக கண்காணித்து தகவல் வழங்கக்கூடிய திட்டமே இதுவாகும்.
இதன் மூலம் பயிர்களுக்கு தேவையான நீர் காணப்படும் நிலங்கள், நீர் பற்றாக்குறை உள்ள நிலங்கள் என்பவற்றினையும் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் அடுத்த கட்டம் தொடர்பில் லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரியில் உள்ள குழு ஒன்று ஆய்வு செய்து வருகின்றது.
இக் குழுவிற்கு பேராசிரியர் மாட்டின் வூஸ்டர் தலைமை தாங்குகின்றார்.