புதிய கோள்களை நேரடியாக படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்!
9 ஆனி 2019 ஞாயிறு 06:45 | பார்வைகள் : 2538
கடந்த வருடம் PDS 70 எனும் நட்சத்திரமானது கோளாக மாறுகின்றமையை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது மற்றும்மொரு நட்சத்திரமும் கோளாக மாற்றம் பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இப்படியிருக்கையில் அருகருகாக காணப்படும் இரு கோள்களையும் ஒரே நேரத்தில் படம் பிடித்து அசத்தியுள்ளனர்.
கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட புதிதாக தோன்றும் கோளுக்கு தற்போது PDS 70b எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மற்றைய புதிதாக தோன்றும் கோளுக்கு PDS 70c என பெயரிடப்பட்டுள்ளது.
இவை இரண்டும் பூமியிலிருந்து 370 ஒளியாண்டு தூரத்திற்கு அப்பால் காணப்படுகின்றன.
அத்துடன் PDS 70b ஆனது யூப்பிட்டரின் திணிவை போன்று 4 தொடக்கம் 17 மடங்கு திணிவை உடையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.