பூமியுடன் விண்கல் மோதும் அபாயம்: நாசா விடுக்கும் எச்சரிக்கை..!
6 வைகாசி 2019 திங்கள் 11:50 | பார்வைகள் : 2947
எமது வாழ்நாள் காலப் பகுதியில் பூமியுடன் விண்கல் மோத வாய்ப்புள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாகியான ஜிம் பிறைடென்ஸ்ரைன் தெரிவித்தார்.
அமெரிக்க வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான கோள் பாதுகாப்பு கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி விண்கல் தொடர்பான அச்சுறுத்தல் என்பது ஒரு கற்பனைத் திரைப்படக் கதையல்ல என வலியுறுத்திய அவர் இந்த அச்சுறுத்தல் தொடர்பிலும் அதனைத் தடுப்பது குறித்தும் உலகளாவிய ஆய்வொன்று முன் னெடுக்கப்பட வேண்டும் என அழைப்ப விடுத்தார்.