நிலவில் ஆய்வு நிலையத்தை அமைக்கத் திட்டமிடும் சீனா!
28 சித்திரை 2019 ஞாயிறு 12:51 | பார்வைகள் : 2882
சீனா அடுத்த பத்தாண்டுகளில் நிலவில் ஆய்வு நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பவிருப்பதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஜனவரியில் சீனா Chang'e-4 விண்கலத்தை நிலவின் விளிம்பில் வெற்றிகரமாகத் தரையிறக்கிறது.
விண்வெளி வல்லரசு என்ற நிலையை எட்ட முயலும் சீனாவின் இலக்கில், அது முதல் படியாகக் கருதப்படுகிறது.
2020ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கோளுக்கு விண்கலம் அனுப்பவும் சீனா திட்டமிடுகிறது.