Paristamil Navigation Paristamil advert login

செவ்வாய்க் கிரகப் பாறையில் துளையிட்ட ஆய்வுக் கலம்

செவ்வாய்க் கிரகப் பாறையில் துளையிட்ட ஆய்வுக் கலம்

16 சித்திரை 2019 செவ்வாய் 12:17 | பார்வைகள் : 9020


செவ்வாய்க் கிரத்தின் நிலத்தடிப் பாறையில் துளையிட்டு, அதன் மாதிரிகளை முதன் முறையாக அமெரிக்காவின் கியூரியாசிட்டி ஆய்வுக் கலம் சேகரித்துள்ளது.

 
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் கியூரியாசிட்டி ஆய்வுக்கலம், அண்மையில் நிலத்தடிப் பாறையொன்றில் துளையிட்டு அதன் மாதிரிகளை சேகரித்துள்ளது.
 
அந்த கிரகத்தில் தரையிறங்கிய 2,370-ஆவது செவ்வாய்க் கிரக நாளில் (2,244 பூமி நாள்), அதாவது கடந்த 6-ஆம் திகதி இந்தச் சாதனையை கியூரியாசிட்டி செய்துள்ளது.
 
ஷார்ப் மலைப் பகுதியில், களிமண் பிரிவு என்றழைக்கப்படும் இடத்தில், அபெர்லேடி என்று பெயரிடப்பட்ட நிலத்தடிப் பாறையில் துளையிடப்பட்டுள்ளது.
 
அருகிலுள்ள வேரா ரூபின் ரிட்ஜ் என்ற பகுதியில் பாறையில் துளையிடுவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், இந்தப் பாறையில் வெற்றிகரமாகத் துளையிட்டு, உள்பொருள்களை கியூரியாசிட்டியிலுள்ள கருவி மிக எளிதில் உறிஞ்சி எடுத்துள்ளது.
 
சேகரிப்பட்ட மாதிரிகள், கியூரியாசிட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மாதிரிகளின் தன்மைகள் குறித்து அந்த ஆய்வகம் சோதனைகளை மேற்கொள்ளும்.
 
துளையிடும் கருவியை மட்டும் பயன்படுத்தி, செவ்வாய்க் கிரக மாதிரிகளை கியூரியாசிட்டி ஆய்வுக்கலம் சேகரித்துள்ளது இதுவே முதல் முறையாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்