பிளாக் ஹோல் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட நாசா!
11 சித்திரை 2019 வியாழன் 08:34 | பார்வைகள் : 9143
நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக பிளாக் ஹோலின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த பிளாக் ஹோல் M87 என அழைக்கப்படும் கேலக்ஸியில் உள்ளது.
EHT தொலைநோக்கித் திட்டம், 2012-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. பிளாக் ஹோல் (கருந்துளை) பற்றிய தகவல்கள் சேகரிக்கவும், அதைச் சுற்றி உள்ள சூழலைக் கண்காணிக்கவும் இது கொண்டுவரப்பட்டது.
ஒவ்வொரு கேலக்ஸியின் நடுவிலும் ஒரு மிகப்பெரிய பிளாக் ஹோல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவற்றின் புவி ஈர்ப்பு சக்தி மிகவும் அதிகம் என்பதால், இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்தும் வெளிவரமுடியாதபடி உள்ளே ஈர்க்கப்பட்டுவிடும்.
இதைப் பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுத்துள்ளது இந்த EHT குழு.
இந்த EHT திட்டத்தின் மூலம் முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.