புதிய விண்வெளி திட்டத்திற்கு தயாராகும் நாசா!
26 பங்குனி 2019 செவ்வாய் 04:33 | பார்வைகள் : 9054
அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமானது செவ்வாய் கிரகம் தொடர்பில் தற்போது தொடர்ச்சியான ஆய்வினை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கிடையில் நெப்டியூன் கிரகத்தின் சந்திரன் ஆன ட்ரிடோனிற்கு விண்வெளி ஓடத்தினை செலுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.
இதற்கான திட்டம் தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்திற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதும் வெகு விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெப்டியூனின் குறித்த சந்திரன் ஆனது முதன் முறையாக 1846 ஆம் ஆண்டளவில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.