பூமியின் காற்று மண்டலத்தில் வெடித்த எரிகல்!
22 பங்குனி 2019 வெள்ளி 07:45 | பார்வைகள் : 9035
பூமியின் காற்று மண்டலத்தில் எரிகல் ஒன்று சென்ற ஆண்டு டிசம்பரில் வெடித்ததாக நாஸா எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்திருக்கிறது.
30 வருடங்களில் அத்தகைய 2-ஆவது ஆகப் பெரிய வெடிப்பு அது என்றும் நாஸா கூறியது.
ரஷ்யாவின் கம்ச்சட்கா தீபகற்பத்துக்கு அப்பால் 'பெரிங்' கடலுக்கு உயரே வெடிப்பு நிகழ்ந்ததால், அது பற்றி வெளியே அதிகம் தெரியவில்லை.
ஹிரோஷிமா அணுக்குண்டைவிட அந்த வெடிப்பு 10 மடங்கு அதிகமான சக்தியை வெளியிட்டிருந்தது.
இது போன்ற வெடிப்புகள் 100 ஆண்டுகளில் 2 அல்லது 3 முறைதான் நடக்கும் என்று நாஸாவின் கோள்கள் தற்காப்பு அதிகாரி லிண்ட்லேய் ஜான்சன் கூறினார்.
சென்ற ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி நண்பகல் வாக்கில் சம்பவம் நிகழ்ந்தது. பூமிக்கு 25.6 கிலோமீட்டர் உயரே விண்கல் வெடித்துச் சிதறியது.
அச்சம்பவம் பற்றி டெக்சஸில் நடைபெற்ற 50-ஆவது சந்திர, கிரக அறிவியல் மாநாட்டில் பேசப்பட்டது.