Paristamil Navigation Paristamil advert login

இரவிலும் ஒளிர தயாராகும் சூரியன்!

இரவிலும் ஒளிர தயாராகும் சூரியன்!

12 பங்குனி 2019 செவ்வாய் 15:11 | பார்வைகள் : 12405


சீனாவிலுள்ள இயற்பியல் ஆய்வககத்தில் பணியாற்றி வரும் அறிவியலாளர்கள் செயற்கை சூரியனை உருவாக்கும் பணிகள் இந்தாண்டு இறுதியில் நிறைவடையும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 
 
இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை இணைத்து, அதன்மூலம் மிகப்பெரிய அளவிலான ஆற்றலை உற்பத்தி செய்யலாம். இதை அணுக்கரு இணைவு என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இப்படி ஒரு செயல் நிகழ்வதால் தான் ஒளி மற்றும் வெப்ப ஆற்றல்களை சூரியன் உருவாக்குகிறது. 
 
அந்த ஆற்றல்களை செயற்கையாக பூமியில் உருவாக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் நீண்ட நாள் கனவாகும். இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் பணியில் சீனா இறங்கியது. அதன்படி, பல ஆண்டுகளுக்கு முன் Experimental Advanced Superconducting Tokamak Reactor (EAST) என்ற பெயரில் அணுக்கரு உலையை உருவாக்கினார்கள். 
 
இதன் மூலம் அணுக்கரு இணைப்பை ஏற்படுத்தி, எச்.எல்.2-எம் என்ற செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தாண்டு இறுதியில் எச்.எல்.2-எம் செயற்கை சூரியனை தயாரிக்கும் பணிகள் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. 
 
சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்ஷியஸ். ஆனால் சீனா தயாரித்து வரும் இந்த செயற்கை சூரியனின் 100 மில்லியன் வெப்ப டிகிரி செல்ஷியஸ். இயற்கையான சூரியனை விட, இந்த செயற்கை சூரியனின் வெப்ப 6 மடங்கு அதிகமானது. 
 
அணுக்கருவை இணைப்பதை எவ்வளவு நேரம் நீடிக்கச் செய்கிறோம் என்பதில் தான் இந்த வெற்றியே அடங்கியுள்ளது. முன்னதாக, 2003ம் ஆண்டு பிரான்ஸில் நடத்தப்பட்ட ஆய்வில் அணுக்கரு இணைப்பு 6 நிமிடங்கள் 30 நொடிகள் மட்டுமே நீடித்தது. ஒருவேளை இதில் வெற்றி அடைந்தால் நிச்சயம் செயற்கை சூரியனின் ஒளிர்வும் நீடிக்கும். 
 
ஒரு பொருள் திண்மம், திரவம், வாயு என மூன்று அளவீடுகளில் கணக்கிடப்படுகிறது. ஆனால், நான்காவதாக ஒரு நிலை உள்ளது அது தான் பிளாஸ்மா. இதை நடுநிலையான வாயுக்கலவை மூலமே பெற இயலும். இதை கட்டுப்படுத்த காந்தப் புலங்கள் முக்கியமாக தேவைப்படுகிறது. 
 
பிளாஸ்மாவை காந்தப் புலங்கள் மூலம் கட்டுப்படுத்தி நிலையான அணுக்கரு இணவு சாத்தியப்படுத்தப்பட்டால், சீனாவின் செயற்கை சூரியன் தயாரிப்பு திட்டம் வெற்றியடையும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை. அது இந்த வழிமுறையில் சாத்தியம் என்கின்றனர் சீனா இயற்பியல் ஆய்வாளர்கள். 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்