வெற்றிகரமாக ஏவப்பட்ட Crew Dragon சோதனை விண்கலம்!
4 பங்குனி 2019 திங்கள் 11:31 | பார்வைகள் : 9171
நாஸாவும் SpaceX எனும் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து சோதனை விண்கலம் ஒன்றை பாய்ச்சியுள்ளன.
Crew Dragon என்றழைக்கப்படும் அந்த விண்கலம், சற்று முன்னர், விண்வெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாகச் சென்றடைந்திருக்கிறது.
Falcon 9 உந்துகணை மூலம் விண்ணில் பாயச்சப்பட்டது Crew Dragon விண்கலம்.
ஆளில்லா விண்கலச் சோதனை வெற்றியடைந்தால், பூமிக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதைக்கு மனிதர்களை அனுப்ப நாஸாவும் SpaceX நிறுவனமும் திட்டமிடுகின்றன.
அடுத்த ஆண்டு தனது Starliner விண்கலத்தை இத்தகைய முயற்சியில் ஈடுபடுத்தப்போவதாக Boeing நிறுவனம் தெரிவித்துள்ளது.
Crew Dragon என்ற சோதனை விண்கலத்தில் மனிதர்களைப் பிரதிபலிக்கும் உருவ பொம்மைகள் இணைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பொருத்தப்பட்டுள்ள உணர்கருவிகளின் மூலம் விண்வெளிச்சூழல் பற்றிய தகவல்களை நிறுவனங்கள் பெறலாம்.
இருப்பினும், மனிதர்களை அங்கு அனுப்புவதற்கு முன், கடுமையான சோதனைகள் நடத்தப்படும் என்று அவை கூறின.
SpaceX நிறுவனத்தின் விண்கலங்கள் சில அண்மை காலமாகத் தொழில்நுட்பக் கோளாற்றுக்கு ஆளாகியுள்ளன.
Crew Dragon விண்கலம் ஐந்து நாள்களுக்குப் பிறகு, பூமிக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.