செவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
28 மாசி 2019 வியாழன் 06:55 | பார்வைகள் : 8765
செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான டிக்கெட் விலையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் மிகக் குறைவு என அறிவித்தது.
ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் , செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான ஒரு காலணியை உருவாக்கப்போவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பல அறிஞர் மற்றும் விஞ்ஞானிகளின் விமர்சனங்களுக்குப் பின்பு 2017ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தத் துவங்கினார் எலான் மஸ்க்.
இதற்கிடையில், நிலவுக்கு மனிதனை அனுப்பவும் திட்டமிட்ட மஸ்க், ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் Yusaku Maezawa தான் முதன் முதலில் நிலவுக்கு சுற்றுலா செல்ல உள்ளார் என அறிவித்தார்.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கான டிக்கெட் விலையை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதில் டிக்கெட் விலை 5 லட்சம் டொலருக்கு குறைவு எனவும், செவ்வாய் கிரகத்தில் தங்குவதற்கு அதிகப்படியாக 5,00,000 டொலர் மற்றும் 1,00,000 டொலருக்கும் குறைந்த விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.