செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம்! வெளியாகிய ஆதாரம்
25 மாசி 2019 திங்கள் 15:41 | பார்வைகள் : 9170
பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் ஆறு ஓடியதற்கான ஆதாரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
செந்நிற கிரகம் எனப்படும் செவ்வாயில் மனிதர்களை குடியேற்றுவதற்கு முனைப்புக்காட்டப்பட்டு வருகின்றது.
இதற்காக அங்கு நீர் இருக்கும் சாத்தியம் தொடர்பில் நாசா விண்வெளி ஆய்வு மைய்யம் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
எனினும் இதுவரை நீர் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லையாயினும், நீர் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் புதிய படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதில் ஆற்று நீர் ஓடியமைக்கான தடங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இப்பிரதேசத்தில் 3.5 தொடக்கம் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.