Paristamil Navigation Paristamil advert login

இயந்திரங்களே தவறான அறிவியல் புரிதலுக்குக் காரணம்!

இயந்திரங்களே தவறான அறிவியல் புரிதலுக்குக் காரணம்!

17 மாசி 2019 ஞாயிறு 11:10 | பார்வைகள் : 9257


அதிக அளவிலான தகவல்களை ஒப்பிட்டு வகுக்க ஆய்வாளர்கள் பயன்படுத்தும் இயந்திரங்கள் தவறான புரிதலுக்கு வகை செய்கின்றன என்று கூறியுள்ளார் அமெரிக்க ஆய்வாளர் ஜெனிவரா எலன் (Genevera Allen).
 
ஹியூஸ்ட்டனிலுள்ள (Houston) ரைஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் எலன், வாஷிங்க்டனில் நடைபெற்ற அறிவியல் தொடர்பான கருத்தரங்கில் தமது கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துகொண்டார்.
 
அதனைப் பற்றி BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
 
பெரும்பாலான ஆய்வுகளில் காலவோட்டத்தில் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
ஆனால், பல சமயங்களில் ஆய்வின் முடிவுகள் உண்மை உலகத்திற்குப் பொருந்தாமல் இருக்கக்கூடும்.
 
உயிர்மருத்துவ ஆய்வு முடிவுகளில் 85 விழுக்காடு உண்மை உலகிற்குப் பொருத்தமற்றுப் போவதாகக் கூறினார் டாக்டர் எலன்.
 
ஆனால், இயந்திரங்கள் வழி தகவல்கள் வகுக்கப்படும்போது ஆய்வுகளின் முடிவுகளில் பிழைகள் ஏற்படக்கூடும் என்றார் டாக்டர் எலன்.
 
இதனால், ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை மேம்படுத்த முனைகிறார் டாக்டர் எலன்.  

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்