Paristamil Navigation Paristamil advert login

சூரியனுக்கு ஆபத்து வருகிறதா.. பிளாக் ஹோலின் மர்மம் என்ன..?

சூரியனுக்கு ஆபத்து வருகிறதா.. பிளாக் ஹோலின் மர்மம் என்ன..?

3 மாசி 2019 ஞாயிறு 05:42 | பார்வைகள் : 12173


விண்வெளியில் உள்ள ஒரு வலுவான ஈர்ப்பு விளைவுகளை வெளிப்படுத்தும் காலவெளியே  இந்த பிளாக் ஹோல் ஆகும். இதைப்பற்றி பல தகவல் ஆச்சர்யமூட்டும் விதத்தில் பரவி வருகின்றன.
 
இந்த கருந்துளைக்குள் சென்ற எந்த பொருளும் மீண்டும் வெளியேறியதில்லை என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. எனவே இதை பொதுச்சார்பியல் கோட்பாடு பிளாக்ஹோல் என்று கணித்துள்ளது என்பதை  நாம் அறிந்துகொள்வோம்..
 
மேலும் இந்த பிளாக்ஹோலுக்கு எந்த விளக்கமும் வரையறையும் கிடையாது. இதுபற்றி விளக்கவும் முடியாது. இது ஒரு அனுமானம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதன் ஈர்ப்பு மண்டலத்துக்குள் சென்றால் திரும்பி வராது என்பது நம் பிரபஞ்சத்திலுள்ள ஈர்ப்பு மண்டலங்களுக்கும் பொருந்தும். கடந்த 2017 ஆம் ஆண்டில் சர்வதேச ஒத்துழைப்பின் கீழ் பூமி அளவிலான ஒர் மெய்நிகர் தொலைநோக்கி ஈவெண்ட் ஹாரிஸான் தொலைநோக்கி உருவானதாகவும் முதன்முதலில் ஒரு கருப்பு துளையின் முதல் நேரடி புகைப்படத்தை கைப்பற்றும் இலக்குதனை கொண்டுதான் இத்தொலைநோக்கியிடம் இருந்து சேகரித்த பல தரவுகள் பூமிக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஓவியர்கள் வரைந்துள்ள  கருந்துளையின் ஓவியங்கள் அவ்வளவு நம்பும் படியாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. மேலும் நம் விண்மீனின் பால்வெளி மையத்தின் நடுவே அமைந்திருக்கும் 4 மில்லியன் சூரிய எடையை கொண்டுள்ள ஒரு கருந்துளை தான் சூப்பர்மேசிவ் பிளாக்ஹோல் என அழைக்கபடுகிறது. இது புவியில் இருந்து 27 000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
 
இது மிகபெரிய விண்மீன் ஆகவும் உள்ளது , இது எம் 87 தான் நம் விண்மீன் கிளாஸ்டர் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய விண்மீனாக உள்ளதாகவும்,இதன் எடை 6 பில்லியன் சூரிய எடைக்குச் சமம் என்றம், நம் சூரிய மண்டலத்தையே விழுங்கிவிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இதன் புகைப்படத்தை விரைவில் வெளியிடப் போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறிவருகிறார்கள். 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்