விண்ணுக்கு செல்கிறது பி.எஸ்.எல்.வி.-சி.44 ரொக்கெட்!
27 தை 2019 ஞாயிறு 06:55 | பார்வைகள் : 9182
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி.44 ரொக்கெட் இன்று இரவு 11.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த ரொக்கெட் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த 690 கிலோ எடைகொண்ட ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோள், ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு மற்றும் ரிபாத் ஷரூக், ஸ்ரீமதி கேசன் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து மிகச்சிறிய அளவில் 34 கிராம் எடையில் தயாரித்துள்ள ‘கலாம் சாட்’ என்ற செயற்கை கோள் ஆகியவற்றை சுமந்தபடி விண்ணில் இன்று இரவு விண்ணுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.