மீண்டும் செயற்படும் நாசாவின் தொலைகாட்டி!
20 தை 2019 ஞாயிறு 06:06 | பார்வைகள் : 9408
இம் மாதம் 8 ஆம் திகதி முதல் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் ஹபிள் தொலைகாட்டி தனது செயற்பாட்டினை நிறுத்தியிருந்தது.
குறித்த தொலைகாட்டியின் வன்பொருள் பாகம் ஒன்று பழுதடைந்திருந்தமையே செயற்பாடு தடைப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதனைக் கண்டுபிடித்த நாசா நிறுவனம் பின்னர் அதனை பழுதுபார்த்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் நேற்றைய தினத்திலிருந்து குறித்த தொலைகாட்டி செயற்பட ஆரம்பித்துள்ளது.
பாதுகாப்பு அளவினை விடவும் அதிகமான அளவில் மின்சாரம் சென்றிருந்தமையே இப் பழுதுக்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நிறுவப்பட்டிருந்த குறித்த தொலைகாட்டி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு வரையிலான 35 வருட காலப் பகுதிக்கு தனது பணியை ஆற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.