Paristamil Navigation Paristamil advert login

முதல் முறையாக விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்த நாசா விண்கலம்!

முதல் முறையாக விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்த நாசா விண்கலம்!

6 தை 2019 ஞாயிறு 12:29 | பார்வைகள் : 8751


பூமியில் இருந்து 110 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசாவின் விண்கலம் சாதனை படைத்துள்ளது.
 
அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா ஓசிரிஸ்-ரேக்ஸ் என்ற செயற்கைகோளை அனுப்பியது. இந்த விண்கலம் பின்னு எனும் விண்கல்லை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது.
 
இந்த விண்கலம் பல ஆண்டுகளாக பயணம் மேற்கொண்டு, பூமியில் இருந்து 110 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பின்னு விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
 
மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள், ஒரு விண்கல்லின் சுற்றுப்பாதையை மிக நெருக்கத்தில் செல்வது, அதாவது 1.75 கிலோ மீற்றர் நெருக்கத்தில் சென்றடைந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
 
இதுவரை எந்த ஒரு செயற்கைகோளும் விண்கல் ஒன்றுக்கு இவ்வளவு அருகில் சென்றதில்லை என்று, ஓசிரிஸ்-ரேக்ஸ் விண்கலத்தை தயாரித்த அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி டான்டி லாரெட்டா தெரிவித்துள்ளார்.
 
மேலும், பின்னு விண்கல் மிகக் குறைந்த புவி ஈர்ப்பு சக்தி கொண்டதால் தான், இந்த செயற்கைகோள் நுழைவது சாத்தியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், அடுத்த மாதம் இறுதியில் இன்னும் நெருக்கமாக சென்று, அந்த விண்கல் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்