முழு உலகிற்கும் புத்தாண்டு பரிசளிக்க தயாராகும் நாசா!
1 தை 2019 செவ்வாய் 11:22 | பார்வைகள் : 9213
விண்ணில் மிகவும் தொலை தூரத்திலுள்ள கோள் ஒன்றை ஒளிப்படம் எடுக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்கலம் ஒன்று அதன் அருகில் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Ultima Thule எனும் அந்தக் கோள், விண்வெளியிலுள்ள ஆகப் பழமையானது என நம்பப்படுகிறது.
அத்துடன், அது பூமியிலிருந்து 6.4 பில்லியன் கிலோமிட்டர் தூரத்தில் உள்ளதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினமான இன்று(செவ்வாய்கிழமை) அந்தக் கோளுக்கு மிக அருகே சென்று நாசாவின் விண்கலம் ஒளிப்படம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விண்கலம் எடுக்கும் ஒளிப்படங்கள் அனைத்தும், புத்தாண்டு தினம் முடிவடைவதற்குள் நாசாவிற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.