செவ்வாய்க்கோளில் குளிர்ப் பிரதேசம்! அதிர்ச்சியை ஏற்படுத்தும் கண்டுபிடிப்பு
30 மார்கழி 2018 ஞாயிறு 12:58 | பார்வைகள் : 8782
பூமியின் சில பகுதிகளில் இப்போது குளிர்காலம் போல் செவ்வாய்க் கோளிலும் குளிர்காலம் உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் Mars Express எனும் செவ்வாய்க் கோள ஆய்வுக்கலம் எடுத்து அனுப்பிய படங்களில், வடதுருவத்திலுள்ள மாபெரும் பள்ளம் ஒன்றில் பனி தெரிகிறது.
சுமார் 82 கிலோமீட்டர் அகலமுள்ள பள்ளத்தில் சுமார் 1.8 கிலோமீட்டர் ஆழத்திற்கு பனி உறைந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய உந்துகணைப் பொறியாளர் Sergei Korolevஇன் பெயர் அந்தப் பள்ளத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.
உலகின் முதல் செயற்கைத் துணைக்கோளை விண்வெளியில் பாய்ச்சியவர் அவர்.
செவ்வாய்க் கோள ஆய்வுப் பணி, வேற்று கிரகங்களில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு மேற்கொள்ளும் முதல் ஆய்வுப் பணியாகும்.