Paristamil Navigation Paristamil advert login

பூமியை நெருங்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை!

பூமியை நெருங்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை!

9 மார்கழி 2018 ஞாயிறு 06:35 | பார்வைகள் : 9008


பூமிக்கு மிக நெருக்கமாக பிரம்மாண்ட விண்கல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
 
அதற்கு விஞ்ஞானிகள் ஆஸ்ட்ராய்டு 2003 எஸ்டி220 என பெயர் வைத்துள்ளனர்.
 
இந்த விண்கல் பூமியை 1.7 வானியல் அலகுகள் தொலைவில் கடக்கும் என நாசா கூறியிருக்கிறது.
 
ஒரு வானியல் அலகு என்பது 92.95 மில்லியன் மைல்கள் ஆகும். இதுவே பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு.
 
பொதுவாக 1.3 வானியல் அலகுகள் தொலைவில் கடக்கும் விண் பொருட்களை ‘பூமியை நெருக்கும் பொருள்’ (Near Earth Object) எனக் கருதுவார்கள்.
 
அந்த வகையில் ஆஸ்ட்ராய்டு 2003 எஸ்டி220 (Asteroid 2003 SD220) என்ற விண்கல்லும் பூமியை நெருங்குவதாக நாசா தெரிவித்துள்ளது.
 
இந்த விண்கல் பூமியை மேலும் நெருங்கி பூமியின் மீது மோதுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்