செவ்வாய் கிரகத்தின் சந்திரனில் பள்ளங்கள்: வெளியாகிய ஆதாரம்
2 மார்கழி 2018 ஞாயிறு 11:06 | பார்வைகள் : 8748
கடந்த 1970 களில் நாசாவானது நமது சூரியத் தொகுதியிலுள்ள பிற கோள்களை ஆராயவென மரீனர் மற்றும் விக்கிங் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இதன்போது செவ்வாயின் சந்திரன்களில் ஒன்றான போபொஸ் இன் புகைப்படங்களைப் படம்பிடித்து வெளியிடப்பட்டிருந்தன.
இதன் மேற்பரப்பில் கோட்டுவடிவில் பள்ளங்கள் அப்போதே அவதானிக்கப்பட்டிருந்தன.
இது எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதற்கான விவாதங்கள் அன்று தொட்டே மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதனடிப்படையில் பல காரணங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், செவ்வாயின் மேற்பரப்பின் மீது கற்பாறைகளின் நகர்வினாலேயே இப் பள்ளங்கள் உருவாகியுள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
அண்மையில் பிறவுண் பல்கலைக் கழக ஆய்வாளர்களான Kenneth Ramsley மற்றும் James Head மேற்கொண்டிருந்த கணனி உருவகப்படுத்தலின் அடிப்படையிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போபொஸ் ஆனது மிகச்சிறிய, உருளைக் கிழங்கு வடிவிலான சந்திரன். .
இது வெறும் 27 கிலோமட்டர்களே அகலமானது.
ஆனாலும் இப் பள்ளமானது 9 கிலோமீட்டர் வரை நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.