சூரியத்தொகுதிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அபூர்வ சந்திரன்!
7 ஐப்பசி 2018 ஞாயிறு 01:20 | பார்வைகள் : 8934
வரலாற்றில் முதல் தடவையாக நமது சூரியத்தொகுதிக்கு வெளியே ஒரு சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது புவிக்கு வெளியே கிட்டத்தட்ட 8,000 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள Kepler-1625b எனும் கோளைச் சுற்றிவந்துகொண்டிருக்கிறது.
கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்களான David Kipping மற்றும் Alex Teachey போன்றோர் மேற்கொண்டிருந்த ஆய்வொன்றிலேயே இதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இக் கண்டுபிடிப்பானது வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளுக்கும் புதிய பாதைகளை வகுக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
Kepler-1625b கோளானது மே 10, 2016 ஆம் திகதியன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதன் பருமன் நமது சூரியத் தொகுதியிலுள்ள மிகப்பெரிய கோளான வியாழனின் பருமனுக்குச் சமனானது.
இது தனது நட்சத்திரமான Kepler-1625 இனைச் சுற்றிவருவது குறிப்பிடத்தக்கது.