Paristamil Navigation Paristamil advert login

அடுத்த மிகப்பிரம்மாண்டமான சூரிய கிரகணம் எப்போது?

அடுத்த மிகப்பிரம்மாண்டமான சூரிய கிரகணம் எப்போது?

2 புரட்டாசி 2018 ஞாயிறு 14:10 | பார்வைகள் : 8741


ஒரு வருடத்திற்கு முன் பாரிய அமெரிக்க சூரிய கிரகணம் பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
அதேநேரம் ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் தோற்றுவித்திருந்தது.
 
பூமி வாசிகள் சந்திரனின் நிழலில் குளிர்காய ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றிருந்தனர்.
 
கிட்டத்தட்ட 200 மில்லியன் அமெரிக்கர்கள் இந்தக் கண்கவர் காட்சியைப் பார்த்திருந்தனர்.
 
நீங்கள் கிரகணத்தை பார்க்க விரும்பும் ஒருவராயின், இதோ உங்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு.
 
ஆனால் நீங்கள் தென் அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆம், அடுத்த கிரகணம் அமெரிக்காவில் உள்ள Lower 48 எனும் இடத்தில் தோன்றவுள்ளது.
 
இப்போதே 2024, ஏப்பிரல் 8 இனை நாள்க் காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
 
சூரிய கிரகணம் என்பது வழமைக்கு மாறான விடயமல்ல. சந்திரனானது சராசரியாக 18 மாதங்களுக்கு ஒரு தடவை சூரிய ஒளியை இடைவெட்டுகின்றது.
 
ஆனால் சந்திரனின் முழு நிழல் புவியின் குறித்த ஒரு இடத்தில் விழுவதென்பது 375 வருடங்களுக்கு ஒரு தடவை மாத்திரமே நிகழ்கின்றது.
 
எனினும் அடுத்த சூரிய கிரகணம் ஜீலை 2, 2019 இல் தென் அமெரிக்காவில் ஏற்படவிருக்கின்றது. இது 4.5 நிமிடங்களுக்கு நீடிக்கக்கூடியது. இதிலுள்ள பிரச்சனை இது தென் பசுபிக்கிலேயே தோன்றவுள்ளது.
 
இதன் ஒடுங்கிய பாதை Chile மற்றும் Argentina ஊடு பயணிக்கின்றது.
 
இக்கிரகணம் சூரியன் மறைவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன்னர் தோன்றும். இதன் கருத்து சூரியன் தொடுவானத்திற்கு மேலே 13 டிகிறியில் இருக்கும்.
 
இதன் பார்வையை முகில்கள் மறைக்கக்கூடும் என தெருவிக்கப்படுகிறது.
 
மற்றுமொரு சூரிய கிரகணம் 2024, ஏப்பிரல் 8 இல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
 
இது Lower 48 இற்கு குறுக்காகத் தோன்றவுள்ளது.
 
இது பசுபிக்கில் தோன்றி Texas இலிருந்து Maine இனை நோக்கி பாதையை விருத்திசெய்யும் போது முதலாவதாக Mexico இனைக் கடக்கிறது.
 
இது கடந்த வருடத்தில் தோன்றியதிலும் மிக அழகானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
 
காரணம் இதன் போது சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக இருக்கும் என்பதால் என சொல்லப்படுகிறது.
 
இதனால் வானில் பெரிதாக தோன்றும். அதேநேரம் இது நீண்ட நேரத்திற்கு சூரியனை மறைக்கின்றது.
 
இதனால் நீண்ட கிரகணத்தைத் தோற்றுவிக்கிறது.
 
இதனால் உண்டாகும் நிழல் 110 மைல் அகலமானதாயிருக்கும். கடந்த வருடத்தில் இதன் அகலம் 70 மைல்களாக இருந்திருந்தது.
 
இதன் பாதையில் காணப்படக்கூடிய முக்கிய நகரங்களாக Dallas, Little Rock, Indianapolis, Cleveland, Buffalo, Burlington, Vt., மற்றும் Montreal. காணப்படுகின்றன
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்