Paristamil Navigation Paristamil advert login

மனிதர்கள் நிலவில் வாழ தடையில்லை? வெளியான புதிய தகவல்

 மனிதர்கள் நிலவில் வாழ தடையில்லை? வெளியான புதிய தகவல்

26 ஆவணி 2018 ஞாயிறு 03:10 | பார்வைகள் : 9213


நிலவில் பல ஆயிரம் வருடங்களாக சூரிய ஒளியே படாத பகுதியில் ஐஸ் கட்டிகள் நிரம்பியுள்ளது என நாசா தெரிவித்துள்ளதாக மேற்கோள் காட்டி இந்திய ஊடமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதனால் எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் வசிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் நாசாவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நிலவில் நீர் இருப்பதை முதலில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கண்டுபிடித்திருந்த நிலையில் தற்போது நிலவில் ஐஸ் கட்டிகள் உள்ளதை, இஸ்ரோ 10 ஆண்டுகளுக்கு முன் அனுப்பி செயலிழந்த சந்திராயன் 1 அனுப்பிய தகவல்களை வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, நிலவின் மேற்பகுதியிலிருந்து சில சென்டிமீற்றர்கள் ஆழம் வரை ஐஸ் கட்டிகள் நிரம்பியுள்ளதை நாசாவின் எம் 3 எனப்படும் மூன் மினராலஜி மேப்பர் சாதனம் மூலம் கண்டறிந்துள்ளதாக குறித்த இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
அத்துடன், சூரிய ஒளிபடாத நிலவின் ஒரு பகுதியில் - 156 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதாலேயே ஐஸ் கட்டிகள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், நிலவில் வெப்பநிலை உயர வாய்ப்பில்லை என்பதால் இயற்கை அல்லது செயற்கை வழியில் நிலவின் வெப்பநிலையை உயர்த்தி ஐஸ் கட்டிகளை உருக வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வசிப்பது சாத்தியமாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்