Paristamil Navigation Paristamil advert login

பூமியைக் கடந்து செல்லும் ராட்சத விண்கல்!

பூமியைக் கடந்து செல்லும் ராட்சத விண்கல்!

15 புரட்டாசி 2019 ஞாயிறு 12:23 | பார்வைகள் : 9452


850 அடி நீளமுடைய ராட்சத விண்கல் பூமியை கடந்து சென்று விட்ட நிலையில், புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் அளவைக் கொண்ட மற்றொரு விண்கல் நாளை கடந்து செல்கிறது.

 
2000 QW7 மற்றும் 2010 CO1 எனப் பெயரிடப்பட்ட இரு விண்கற்களை நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்து அவற்றைத் தொடர்ந்து கண்காணித்தது.
 
அவற்றில், 2010 C01 விண்கல்லானது, 400 முதல் 850 அடி நீளம் கொண்டது என்றும், மற்றொரு விண்கல், உலகிலேயே மிக உயரமான கட்டிடமான பூர்ஜ் கலிபாவுக்கு இணையானது எனவும் கணிக்கப்பட்டது.
 
அந்த விண்கல்லின் நீளம் 950 முதல் 2100 அடி வரை இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டது. பூமிக்கு அருகே உலவும் விண் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியில், இந்த இரு விண்கற்களும் சிக்கின.
 
இரு விண்கற்களும், பூமியில் இருந்து 56 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்று நாசா கூறி இருந்தது. அதன்படி, 2010 C01 விண்கல்லானது. சனிக்கிழமை காலை 9.12 மணி அளவில் பூமியைக் கடந்து சென்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
புர்ஜ் கலிஃபா கட்டிடத்தைப் போன்ற விண்கல்லானது நாளை அதிகாலை 5.24 மணி அளவில் பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது.
 
இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று நாசா விளக்கம் அளித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 20,000 விண் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்