Paristamil Navigation Paristamil advert login

வெற்றிகரமாக மாற்றியமக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை!

வெற்றிகரமாக மாற்றியமக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை!

31 ஆவணி 2019 சனி 03:39 | பார்வைகள் : 8391


நிலவை நெருங்கி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை நான்காவது முறையாகவும் வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது.
 
ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் திகதி சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.ஷ
 
இந்நிலையில், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நான்காவது முறையாக சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.
 
இன்னும் ஒருமுறை சுற்றுவட்டப் பாதை மாற்றியமைக்கப்பட்டதன் பின்னர் நிலவில் சந்திரயான் தரையிறங்கும்.
 
செப்டம்பர் 7ஆம் திகதி, சந்திரயான் 2 நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதன்பின்னர் நிலவில் லேண்டர் மற்றும் ரோவர் இறங்கி நிலவிலுள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்