டைட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கலமென்சவ்வை உருவாக்கக்கூடிய இரசாயனப் பதார்த்தம்!
3 ஆவணி 2017 வியாழன் 17:30 | பார்வைகள் : 9510
உயிரினங்களின் கல மென்சவ்வினை செயற்கையான முறையில் உருவாக்கக்கூடிய இரசாயனப் பதார்த்தம் ஒன்று சனிக்கிரகத்தின் உபகோளான டைட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குளிர்மையானதாகக் காணப்படும் இந்த இரசாயனப் பதார்த்தம் பிளாஸ்டிக்கினை உருவாக்கப் பயன்படும் சேர்வையை ஒத்ததாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைட்டன் தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்போது Acrylonitrile அல்லது Vinyl Cyanide என அழைக்கப்படும் C2H3CN எனும் மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
தற்போது நாசா நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. உறுதிப்படுத்துவதற்கான தகவல்கள் அனைத்தும் சிலியில் அமைந்துள்ள Atacama Large Millimeter/Submillimeter Array (ALMA) எனும் வானியல் தொலைகாட்டியின் ஊடாக பெறப்பட்டுள்ளது.