நிலவில் பாரிய துளைகள்! அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்
11 ஆடி 2017 செவ்வாய் 06:58 | பார்வைகள் : 9403
நிலவைப் பாடாத கவிஞர்களே இல்லை. மதி போன்ற முகம் என்றும் வெண்ணிலா வதனம் என்றும் அழகான பெண்களை வர்ணிப்பதில் ஒருவித ஆசுவாசம் கண்டனர் அன்றைய கவிஞர்கள். இன்று புதுக்கவிதை எழுதுகின்ற கவிஞர்கள் வரை இது தொடரத்தான் செய்கிறது.
சரி, நாம் நினைப்பதைப் போல நிலவு அவ்வளவு அழகானதா என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுதான் நிலவின் பிரமாண்டமாக பெருப்பிக்கப்பட்ட படங்களும் காணொளிகளும். நிலவில் பெரிய பெரிய பாறைகள் படர்ந்திருப்பதனாலும் அவற்றை பெருப்பித்துப் பார்த்தால் அலங்கோலமாக இருக்கின்றதென்றும் கூறப்பட்ட கதைகளால் நிலவைப் பெண்ணின் முகத்துக்கு ஒப்பிட்டு எழுதிய கவிஞர்கள் சற்றுப் பின்வாங்கினர்.
ஆனாலும் அன்றாடம் பல விந்தைகளைப் புரிந்துவரும் நவீன தொழினுட்பம் நிலவை வேறு வேறு கோணங்களிலிருந்தெல்லாம் படமெடுத்து நிலவின் அழகை பிரமிப்பூட்டும் வகையில் வெளியிட்டுவருகின்றது.
அந்த வகையில் கடந்த பௌர்ணமி தினத்தன்று பதிவாகிய நிலவின் காணொளி மிகவும் பிரமிப்பூட்டும்வகையில் அமைந்திருந்தது. நிலவில் லட்சக்கணக்கான மின்னொளிகள் பூட்டியதைப் போல அற்புதமான தோற்றமாக இருந்தது.
மேலும் நிலவின் கோளவடிவமான காட்சியானது உரித்த தோடம்பழம் போல காட்சியளிப்பதாகவும் சிலர் சொல்கின்றனர். அதுதவிர இதில் அதிர்ச்சிகரமான உண்மை ஒன்றும் பதிவாகியுள்ளது.
அதாவது நிலவில் சில பாரிய துளைகள் காணப்படுகின்றதென்றும் இவை விண்கற்களின் மோதலாக இருக்குமோ என்ற சந்தேகமும் விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்துள்ளன.