வேற்றுகிரகவாசிகள் தொடர்பில் பிரபல விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
28 ஆனி 2017 புதன் 05:36 | பார்வைகள் : 9303
வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள். ன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. நாசாவும் அதன் பங்கு நிறுவனங்களின் நிபுணர்கள் இணைந்து விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள ’ரோடு- மேப்’ அமைந்துள்ளனர். அதன் வழியாக சக்தி வாய்ந்த அதிநவீன டெலஸ் கோப்புகளை நிறுவியுள்ளனர்.
20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளின் நிலையை கண்டறிய முடியும். ஜேம்ஸ் வெப் விண்வெளி டெலஸ் கோப் மற்றும் சக்தி வாய்ந்த உபகரணங்கள் மூலம் இது சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெப்லர் எக்சோப்லாநெட் என்ற விண்வெளி தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டு, 2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை பூமியை போல் வேற்றுக்கிரகங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிய பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. அவற்றில் ௧,45,000 சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை ‘சிக்னஸ் நட்சத்திர’ கூட்டத்திற்கு அருகே இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
கெப்லர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ள நட்சத்திரங்கள் பலவும் பூமியிலிருந்து நூறு முதல் ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பவை என்பதால் இதுவரை மனிதர்கள் செல்லாத எல்லைவரை இந்த விண்வெளி தொலைநோக்கி படம் எடுத்து அனுப்பியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியைப் போன்ற கிரகங்களை அண்டச் சராசரத்தில் கண்டுபிடிப்பது என்பது சர்வ சாதாரணம் என்றாலும் வானியல் வல்லுநர்கள் இந்தக் கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
கெப்லர் தொலைநோக்கியின் கள விஞ்ஞானியான சூசன் தாம்ப்சன் கூறுகையில் ‘நாங்கள் தொலைநோக்கியின் உதவியோடு பூமியை போன்று இந்த வெளியில் இன்னும் எத்தனைக் கிரகங்கள் உள்ளது என்பதைக் கணக்கிட்டு வருகிறோம்’ என்றார். மேலும் ‘தற்போது எங்களிடமுள்ள ஆதாரங்களுடன், எந்தெந்த கிரகங்களில் பூமியைப் போன்ற பொதுவான கூறுகள் அதிகம் உள்ளது என்று ஆராய்கிறோம், இதன்மூலம் மனிதர்கள் வசிப்பதற்கான சரியான கிரகத்தைக் கண்டுபிடிக்க அதிக வாய்ப்புள்ளது’ என்றும் கூறினார்.
இதற்கு முன் மேற்கொண்ட ஆய்வுகள் உட்பட, சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஏறக்குறைய 3,500 கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த கெப்லர் தொலைநோக்கி பூமியை போன்று இருக்கும் மற்ற கிரகங்களும் திடமான மேற்பரப்பு கொண்டிருக்கிறதா இல்லை நெப்டியூன் கிரகத்தைப் போன்று வாயுவை அதிகமாகக் கொண்டிருக்கிறதா என்று மதிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வேறுபாட்டைக் கண்டறிவதன் மூலம் அந்தக் கிரகத்தில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்கிறார்களா என்பதையும் அறியலாம்.
‘சூப்பர் எர்த்ஸ்’ மற்றும் ‘மினி நெப்டியூன்ஸ்’ என்று அழைக்கப்படுபவை சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ளவை என்பதால், விஞ்ஞானிகள் புளூட்டோவிற்கு அப்பால் ஒன்பதாவது கிரகத்தை கண்டுபிடிக்க மும்முரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பத்து கிரகங்களும் பூமி எவ்வாறு சூரியனை சுற்றி வருகிறதோ அதே தூர அளவில் இவையும் தங்கள் சூரியனைச் சுற்றி வருகிறது, அதனால் பூமியில் உள்ளது போல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் திரவ நீர் ஆதாரங்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதால், உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகமுள்ளது.
‘மனிதர்கள் இங்குத் தனியாக இருக்கிறோமா?’ என்று எழுந்த கேள்விக்கு ‘கெப்லர் அறாய்ச்சி மறைமுகமாக நாம் இங்குத் தனியே இல்லை என்று அறிவுறுத்துவதாகவே தெரிகிறது’ என்று விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர்.
புகழ்பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானி நீல் டி கிராஸ்ஸி டைசன் கூறும் போது பிரபஞ்சத்தில் மனிதர்கள் தனியாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. வாழ்க்கையின் முக்கியத்துவம் என்னவென்று நீங்கள் பார்த்தால், பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்க முடியாது.ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன்; நாம் இந்த விஷயங்களைச் செய்துள்ளோம், அது கரிம வேதியியல், கார்பன் சார்ந்த வாழ்க்கை அடித்தளமாகும்.இந்த விஷயங்கள் பிரபஞ்சத்தில் எங்கும் காணப்படுகின்றன. பூமியில் நடந்தது அரிதான அல்லது தனிப்பட்டதாக இருக்காது என கூறினார்.