நிலவில் உருளைக்கிழங்கு விவசாயம்?
25 ஆனி 2017 ஞாயிறு 08:11 | பார்வைகள் : 9701
இதுதொடர்பாக சாங் கிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜி ஜெங்ஜின் கூறுகையில், “அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள சாங்ஜி 4 திட்டத்தின் ஒரு பகுதியாக, பூமியில் நிலவுவது போன்ற சூழல் கொண்ட ஒரு சிறிய பெட்டகத்துக்குள் உருளைக்கிழங்குகள் அடைக்கப்படும்.
பூமியின் துணைக்கோளான நிலவின் மேற்பரப்பில் உள்ள சிறிய சிலிண்டருக்குள் சில பட்டுப்பூச்சி லார்வாக்களும் அடைக்கப் படும்” என நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நிலவின் மேற்பரப்பில் பூச்சிகள் அல்லது கிழங்குகள் தாக்குப்பிடிக்குமா என்பதைக் கண்டறிவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
இந்த ஆராய்ச்சியில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு எதிர்காலத்தில் நிலவில் மனித வசிப்பிடங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த சில முக்கியத் தகவல்கள் கிடைக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஆன்டி வெய்ர் என்பவர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு, 2015-ம் ஆண்டு வெளியான ‘மார்ஷியன்’ என்ற அறிவியல் கற்பனை திரைப்படத்தில், உருளைக் கிழங்குகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
செவ்வாய்க் கிரகத்தில் சிக்கிக்கொள்ளும் விண்வெளி வீரரான மேட் டேமன், அந்தக் கிரகத்தில் வாழ்வதற்காக உருளைக்கிழங்குகளைப் பயிரிடுவது போன்ற காட்சிகள் அப்படத்தில் இடம்பெற்றிருந்தன.