வியாழன் கிரகம் தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தகவல்
15 ஆனி 2017 வியாழன் 11:41 | பார்வைகள் : 9298
யூப்பிட்டர் என அழைக்கப்படும் வியாழன் கிரகம் எமது சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளாக இருக்கின்றது.
இவ்வாறிருக்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மற்றுமொரு சிறப்பியல்பினைக் கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களிலும் மிகவும் பண்டைய கோள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த 2 அல்லது 3 மில்லியன் வருடங்களின் பின்னர் பூமியின் திணிவைப் போன்று 50 மடங்கு திணிவினைக் கொண்டிருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தகவலை National Academy of Sciences அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.