பூமிக்கு வேற்றுகிரகவாசிகளின் வருகை அதிகரிப்பு!

8 ஆனி 2017 வியாழன் 09:57 | பார்வைகள் : 12791
ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.
தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். என கூறி உள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய திட்டம் ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளூக்கு ரூ.640 கோடி செலவிடப்படுகிறது. ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார். இந்த திட்டத்திற்கு கேம்ரீஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த வானவியலாளர், காஸ்மோலாகிஸ்ட் பேராசிரியர் லார்டு மார்ட்டீன் ரீஸ், தலைமை தாங்குகிறார்.
இந்த திட்டத்தின் படி ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்சில் 64 மீட்டர் ( 210 அடி ) பார்க் தொலைநோக்கி மூலமும், மேற்கு வர்ஜினியாவில் 100 மீட்டர் (328 அடி) பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கியும் நிறுவப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது.
இந்த நிலையில் கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளிபால் ஹெல்யர் வேற்றுகிரகவாசிகள் குறித்து புதுவித தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அவர் கூறியதாவது:-
இதுவரை 4 வகையான வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வந்து சென்றுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக வேற்றுகிரகவாசிகளின் வருகை அதிகரித்துள்ளது.
பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசகிள் மனிதர்களின் கண்டுபிடிப்பான அணுகுண்டை பார்த்து வருத்தம் கொள்கிறார்கள், ஏனெனில் அணுகுண்டானது அண்டசராசரத்தில் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் நம்புகிறார்கள்.
மேலும், பூமியை பசுமையாக்கும் பல்வேறு யோசனைகள் அவர்கள் வசம் உள்ளன, வேற்றுகிரகவாசிகளால் பருவ மாற்றங்களுக்கு தீர்வு காண முடியும்.
சில வேற்றுகிரகவாசி பெண்கள் அமெரிக்காவின் வெகஸ் நகரில் கன்னியாஸ்திரிகளைப் போல ஆடையணிந்து ஷாப்பிங் சென்றுள்ளனர். அவர்களை நான் பார்த்துள்ளேன், ஆனால் அதற்கான ஆதாரம் என்னிடம் இல்லை. அவர்களை பார்த்த நான் மட்டுமே இதற்கு ஆதாரம் என கூறியுள்ளார்.
சர்வதேச விண்வெளி மையம் நாசாவின் முன்னாள் கமாண்டர் டாக்டர் லெரொய் சியோ ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸில் உள்ள வொல்லோங் கோங் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தார் அங்கு மாணவர்களியே பேசிய அவர் கூறியதாவ்து:-
சமீபத்தில் சனிகிரகத்தின் நிலவில் நீர் உள்ளது கண்டறியபட்டு உள்ளது. மேலும் வளிமண்டலங்களில் அமினோ அமிலங்கள் உள்ளது.பிரபஞ்சத்தில்நம்மை தவிர வேறு வேற்றுகிரகவாசிகளும் உள்ளனர் எனற கருத்தை இது காட்டுகிறது.
எல்லா வகையான உயிரினங்களும், புத்திசாலித்தனமான வேற்றுகிரகவாசிகளும் உள்ளன என்று நான் நினைக்கிறேன், ஆனால் ஒருவருக்கொருவர் கண்டுபிடிக்க முடியாதது பரந்த தூரத்தில் உள்ளன என நான் நினைக்கிறேன்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1