நிலவை குத்தகைக்கு விடும் அமெரிக்கா! விரைவில் தரையிறங்கும் முதல் தனியார் விண்கலம்

5 ஆனி 2017 திங்கள் 09:26 | பார்வைகள் : 13181
நிலவில் உலகின் முதல் தனியார் விண்கலம் ஒன்று தரையிறங்கப் போகிறது.
நட்சத்திரங்களை மனிதன் கண்டுகொண்ட நாள் முதல், அங்கு காலடி பதிக்க வேண்டும் என்று எண்ணத் தொடங்கி விட்டான். அதிலும் குறிப்பாக நிலவிலும், செவ்வாய் கிரகத்திலும் மனிதர்களுக்கு ஈடுபாடு அதிகம். கடந்த 50 ஆண்டுகளில் விண்வெளிப் பயணம், பல்வேறு வளர்ச்சிப் படிநிலைகளைக் கண்டுள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டின் இறுதியில் விண்வெளிப் பயணத்தில் புதிய மைல்கல்
ஒன்று அரங்கேறப் போகிறது. முதல் முறையாக தனியார் நிறுவனம் ஒன்று தனது விண்கலத்தை நிலவிற்கு அனுப்ப உள்ளது.
மூன் எக்ஸ்பிரஸ் (MoonEx) என்ற தனியார் நிறுவனம் அமெரிக்காவின் கேப் கேனவரல் விண்கல ஏவுதளத்தில் இருந்து, நிலவிற்கு விண்கலங்களை அனுப்பவுள்ளது. நிலவிற்கு செல்வதற்கான தீவிரம் மூன்று வல்லரசு நாடுகளின் கைகளில் இருந்த நிலையில், தற்போது தனியார் நிறுவனங்களும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.
அதற்கு காரணம் கூகுள் நிறுவனம் நடத்தும் லூனார் எக்ஸ் போட்டியில், விண்கலம் ஒன்று நிலவின் பரப்பில் 500 மீட்டர் பயணித்து, அதன் வீடியோவை எச்.டி வீடியோவாக புவிக்கு அனுப்ப வேண்டும். அதில் வெற்றி பெறும் நிறுவனத்திற்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, மூன் எக்ஸ் நிறுவனம் விரைந்து செயல்பட்டு வருகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1