Paristamil Navigation Paristamil advert login

பளபளக்கும் சருமத்திற்கு பப்பாளி....

பளபளக்கும் சருமத்திற்கு பப்பாளி....

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 8728


 முகத்தில் எப்போது பார்த்தாலும் எண்ணெய் வழிந்து டல்லாக இருக்கிறோமே என்று கவலைப் படுகிறவர்களுக்காகவே இந்த பப்பாளி கூழ் மசாஜ்... பப்பாளி பழ தோலை சீவி கூழாக்குங்கள். 

 
இந்த கூழ் - ஒரு டீஸ்பூனுடன், 
முல்தானி மட்டி - அரை டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். 
 
இதை முகத்தில் பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும். அதோடு, மேனியை சிவப்பாக்கும் மந்திரமும் இருக்கிறது. இந்த மசாஜில்! ஆண்களின் முகம் போல் சொரசொரப்பாக இருக்கும் சிலரின் முகம், அவர்களுக்கான சிறப்பு மருந்து இருக்கிறது பப்பாளியின் தோலில். 
 
பப்பாளி தோலை வேகவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கூழை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வந்தால், தொடத் தொட மிருதுவான சருமம் கிடைக்கும். கண்ணுக்குக்கீழ் கருவளையம், கருமை படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை ஆக்கிரமித்த பகுதிகளை நார்மல் நிறத்துக்குக் கொண்டு வருவதில் பப்பாளி ஒரு நிபுணர். 
 
சோற்றுக் கற்றாழை இலை ஒன்றின் ஜெல்லுடன் பப்பாளி கூழ் - 1 டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதை கழுத்திலிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாகத் தேய்த்து, அது நன்றகாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள். வாரம் இருமுறை இந்த சிகிச்சை செய்தாலே கருப்பெல்லாம் காணாமல் போய்விடும். (நார்மல் சருமம் கொண்டவர்களும் இதை ஒரு பேஸ் பேக் ஆக உபயோகிக்கலாம்!)a

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்