Paristamil Navigation Paristamil advert login

வெடிப்புகள் இல்லாத அழகான கால்களுக்கு ...

வெடிப்புகள் இல்லாத அழகான கால்களுக்கு ...

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 8775


 பொதுவாக பெண்கள் மாதம் இரண்டு முறையாவது கை, கால்களை பராமரிக்க வேண்டும். கை, கால்களும் நல்ல பராமரிப்பில் இருப்பது ஒரு பெண்ணுக்கு மிக அவசியமானது. இப்படி பெண்களுக்கு, கால்களில் வரும் பெரிய தொல்லையே வெடிப்புகள் தான். 

 
வீட்டில் செருப்பு அணிய பிடிக்காதவர்கள், அதிக எடை உள்ளவர்கள், ட்ரை ஸ்கின் உள்ளவர்கள், அசுத்தமான இடங்களில் நடப்பவர்கள் என எல்லாருக்குமே இந்த பிரச்சனை உள்ளது. முதலில் இந்த வெடிப்புகளை நீக்குவதற்கு, ரெகுலரான பெடிக்யூர் மிக அவசியம். முதலில் நெயில் பாலீசை அகற்றி, நகங்களை வெட்டி கொள்ள வேண்டும். 
 
கால்கள் அதிக நேரம் தண்ணீரில் ஊறினால் தான் தேய்த்து சுத்தம் செய்வது எளிது. கடினமான தோல்களை எளிதில் நீக்கலாம். வீட்டிலேயே பெடிக்யூர் செய்ய நினைப்பவர்கள், அதற்காக தலைக்கு குளிக்கும் நாளை தேர்ந்தெடுத்தால் நல்லது. குளித்து முடிக்கும்போது, கால்கள் தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும். 
 
ஜலதோஷம் தொந்தரவு, சைனஸ் உள்ளவர்கள் ஒரு பக்கெட் சுடு தண்ணீரில் லிக்விட் சோப் ஊற்றி அதில் கால்களை ஊற வைக்கலாம். கால்களை தேய்க்கவென்றே கடைகளில் ஸ்டீலில் செய்த கைப்பிடி உள்ள புட் ஸ்கிரப்பர் விற்கிறார்கள். இதைக்கொண்டு இறந்த செல்களையும், வெடிப்புகளையும் எளிதாக நீங்கலாம். 
 
எங்கெங்கு வெடிப்பு, அழுக்கு இருக்கிறதோ, அங்கேயெல்லாம் இந்த ஸ்க்ரப்பரால் நன்றாக தேயுங்கள். பின்னர் கால்களை நன்றாக துடைத்துவிட்டு மாய்ச்சுரைசிங் க்ரீமை கால் விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் மசாஜ் செய்வது போல் தடவும். 
 
பிறகு கால்கள் உலர்ந்ததும், நெயில் பாலீஷ் போடுங்கள். கால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள். வெடிப்பு நீக்க களிம்புகளை (ஆயின்மென்ட்) உபயோகிப்பவர்கள், இரவு தூங்கும் போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்து கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன் கிடைக்கும். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்