பூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு!
15 சித்திரை 2018 ஞாயிறு 13:45 | பார்வைகள் : 9275
பூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் மற்றுமொரு காந்தப் புலம் காணப்படுவதனை ஈசா எனப்படும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது சமுத்திரங்களில் காணப்படும் அலைகள் மூலம் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வருடங்களாக சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இக் காந்தப் புலம் தொடர்பான பெறுபேற்றினை டென்மார்க்கில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த நீல்ஸ் ஓல்ஸன் என்பவர் வெளியிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் இப் புதிய காந்தப்புலமானது ஏற்கணவே உள்ள காந்தப் புலத்தினை விடவும் 20,000 மடங்கு வலிமை குறைந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.