Paristamil Navigation Paristamil advert login

குளிர் காலத்தில் சரும வறட்சியை போக்கும் வழிகள்

குளிர் காலத்தில் சரும வறட்சியை போக்கும் வழிகள்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9859


 வறண்ட சருமம் மட்டும்தான் பாதிக்கப்படும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை எனத் தவறாக நினைக்க வேண்டாம். ஈரக்காற்றில் எல்லா சருமமும் வறண்டு போகும். குளித்து முடித்த உடனேயே முகம், கை, கால்களுக்கு மாயிச்சரைசர் தடவ வேண்டும். 

 
சரும வறட்சி நீங்க... 
 
ஆலிவ் ஆயிலில் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து அடித்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊறியதும் வெதுவெதுப்பான தண்ணீரில், கடலைமாவுக் கலவை உபயோகித்துக் கழுவவும். 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 3 துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, சருமத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊறவைத்து, சருமத்துக்கான பொடி உபயோகித்துக் கழுவவும். 
 
வைட்டமின்இ எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து வெதுவெதுப்பாக்கி, சருமத்தில் தடவிக் கழுவலாம். வைட்டமின்இ எண்ணெய், வீட்ஜெர்ம் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறியதும் கழுவினால், குளிர்காலத்தில் சருமத்தில் தோன்றுகிற வெண்மையான படிவங்கள் மாறும். 
 
உதடுகளுக்கு... 
 
பாலாடை அல்லது கிளிசரினும் பன்னீரும் கலந்த கலவை அல்லது வெண்ணெய் இந்த மூன்றில் ஒன்றை தினமும் இரு வேளைகள் தடவி, மென்மையாக மசாஜ் செய்து வந்தால் உதடுகள் வறண்டு, வெடிக்காமலிருக்கும். பிங்க் நிறம் பெறும்.

எழுத்துரு விளம்பரங்கள்