உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் எடுத்த தீர்மானம்
8 ஆடி 2023 சனி 00:00 | பார்வைகள் : 4873
இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பாகிஸ்தான் அணியும் விளையாட உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பை தொடரில் வரும் அக்டோபர் 15-ம் திகதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளது.
முன்னதாக ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்தால், அந்த தொடரில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா கூறியிருந்தது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்ய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் குழு ஒன்றை அமைத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் அஹ்சான் மாசாரியும் இடம்பெற்றுள்ளார்.